சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த சரவணன் என்பவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து உடல் நலம்பெற்று அவர் மீண்டும் வியாழக்கிழமை பணிக்குத் திரும்பினார். அவருக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருவல்லிக்கேணி சரக துணை ஆணையர் தர்மராஜ், சரவணனுக்கு பூங்கொத்து மற்றும் பழங்கள் கொடுத்து வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார். இதில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் அசோகன், ஆய்வாளர் சேட்டு மற்றும் சரவணனுடன் பணியாற்றும் சக காவலர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி வரவேற்றனர்.

Advertisment