Advertisment

விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் முன்னிலையில் சென்னை காவல் ஆணையர் கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மட் அவசியம் குறித்து அறிவுரை!!

police

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னை ரஜீவகாந்தி அரசு மருத்துவனைக்கு கல்லூரி மாணவர்களை அழைத்து சென்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்அங்கு வாகன விபத்தில் காயமடைந்தவர்களை காண்பித்து சாலையில் இருசக்கர வாகனத்தில்செல்லும் பொழுதுஹெல்மட் அணிவதின் அவசியம் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மட் அணிவதின் அவசியம் குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விவேகானந்தா மற்றும் அரசுநர்சிங் கல்லூரி மாணவர்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு வாகனவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவருபவர்கள் மத்தியில் மாணவர்களுக்குஅறிவுரை மற்றும் ஹெல்மட் அணியாமல் பயணம் மேற்கொள்ளவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கி கூறினார்.விபத்து, காயம், உடல்வேதனை, மனவேதனை, ஹெல்மட் அணியாத அலட்சியத்தால் ஏற்படும் விபத்தினால்குடும்பத்தினர் படும் அவதி என அனைத்து காரணிகளையும் சுட்டிகாட்டி மாணவர்கள் ஹெல்மட் அணிய வேண்டும் என கூறினார்.

Advertisment

​  police

police

மேலும்ஹெல்மெட்டை தலையில் அணியாமல் பெட்ரோல் டேங்கில் ஹெல்மட்டை வைத்துக்கொண்டுபயணம் செய்வது, ஒருஇருசக்கர வாகனத்தில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வது போன்ற செயல்களை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் விளக்கி கூறினார். இந்த நிகழ்வில் ''இருசக்கர வாகனம் இவருக்கே'' என்ற விழிப்புணர்வு குறும்படமும் காண்பிக்கப்பட்டது.

Two wheeler helmet police commissioner
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe