Chennai Police Commissioner Viswanathan's decision

Advertisment

சென்னையில் போலீசாருக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்படும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும்,சென்னையில் போலீசாருக்கு சுழற்சி முறையில்7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை ஓய்வு அளிக்கப்படும். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளோம். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீசார் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஓய்வு அளிக்க வேண்டும். சென்னையில் கரோனாவால்இதுவரை சுமார் 320 போலீசார் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.