சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

சென்னையின் 107 ஆவது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொணடார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால்.புதிய காவல் ஆணையர் மகேஷ்குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன்.

அதன் பிறகு செய்தியாளர்ளுக்குப் பேட்டியளித்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "சென்னை மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்ய விரும்புகிறேன். பொதுமக்கள் வீடியோ காலில் புகாரளிக்கலாம். கரோனா பரவக்கூடும் என்பதால் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்." என்றார்.

Chennai Police Commissioner mahesh agarwal PRESS MEET
இதையும் படியுங்கள்
Subscribe