Published on 02/12/2020 | Edited on 02/12/2020

நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். நான் எடுக்கும் முடிவுக்கு மாவட்ட செயலாளர்கள் கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளார்கள்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.