கரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ல் இருந்து 309 ஆக அதிகரித்துள்ளது.

 chennai phoenix mall issue - chennai corporation advises

Advertisment

இதில்வேளச்சேரியில் இயங்கும் ஃபீனிக்ஸ் மால் கட்டிடத்தில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் மூவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஃபீனிக்ஸ் மாலில் உள்ள குறிப்பிட்ட கடைக்கு மார்ச் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்றவர்கள் மற்றும் அந்த தளத்தில் அமைந்துள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி கோருமாறும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 chennai phoenix mall issue - chennai corporation advises

Advertisment

மேலும் தகவல் தெரிவிப்பதற்கு 044 - 2538 4520 / 044 4612 2300 என்ற எண்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.