சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15- வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் 31 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 82.58-க்கும், டீசல் 51 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 75.80- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 14 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 7.04, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 7.58 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.