சென்னையை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
சென்னையில் ஏற்கனவே இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் உள்ள நிலையில், மூன்றாவது கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல். சுமார் 6,073.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தின் நிதிஉதவியுடன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேரூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து அறிவித்திருந்தார். இந்நிலையில் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.