chennai perungalathur pmk parties

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, இன்று (01/12/2020) பா.ம.க. சார்பில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எதிரே போராட்டம் நடத்துவதற்கு அனுமதிகோரி சென்னை மாநகர காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கை பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் பா.ம.க.வின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.இருப்பினும் பா.ம.க.வின் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பேருந்து, வேன் போன்ற வாகனங்கள் மூலம் பா.ம.க.வினர் சென்னை வர தொடங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பெருங்களத்தூர் சாலையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். இதனால் பா.ம.க.வினர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பா.ம.க.வினரின் சாலை மறியல் போராட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisment