தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. மேலும், பெரம்பூர் ஸ்டீபன்சன் மற்றும் புளியந்தோப்பு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.