சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடியை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

chennai peoples police commssioner viswanathan caa issues

இதனிடையே சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

chennai peoples police commssioner viswanathan caa issues

கைதானவர்கள் விடுவிக்கப்பட்டதால் போராட்டத்தை கைவிடுவதாக இஸ்லாமிய அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து செல்ல தொடங்கினர்.மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர் கலைந்து செல்லத் தொடங்கினர்