style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன. இந்த கலவரங்களில் 150- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில்,டெல்லியில் அஹிம்சை வழியில் போராடியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையை கண்டித்தும், மேலும் கலவரத்தின்போது பள்ளிவாசலை சேதபடுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்றைய தினம் (27.02.2020) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.