சென்னையில் கரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 1,257 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் போலீசார் படகுகளை சாலையில் வைத்து அடைத்துள்ளனர். இதனால் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதி முழுவதும் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது.