பட்டினப்பாக்கம் - பெசன்ட் நகர் இணைப்புச் சாலையை மீண்டும் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்தவது தொடர்பான வழக்கில், புயலில் சேதமடைந்த மெரினா லூப் சாலையில் இருந்து பெசன்ட் நகரை இணைக்கும் சாலையை மீண்டும் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்தச் சாலையை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, பட்டினப்பாக்கத்தையும் பெசன்ட் நகரையும் இணைக்கும் சாலையை அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.