chennai old age person cow incident

சாலையில் திரிந்த மாடு முட்டியதால் காயமடைந்து சிகிச்சையில் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள்மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வடக்கு மாட வீதியில், கடந்த 18 ஆம் தேதி காலை சுந்தரம் (வயது 80) என்ற முதியவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த காளை மாடு ஒன்று முதியவர் சுந்தரத்தை முட்டித் தூக்கி வீசியது. காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை மாடு முட்டி வீசும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்த மாடுகளை பிடித்தனர். இதில் முதியவர் சுந்தரத்தை மூட்டித் தூக்கி வீசிய கிர் ரக காளை மாடும் பிடிபட்டது. இந்த மாடு கோவிலுக்குச் சொந்தமான மாடு என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், கோயில் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. அதனையடுத்து பிடிக்கப்பட்ட அந்த மாட்டை காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாடு முட்டியதில் காயமடைந்து கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.