சென்னை அருகே நெற்குன்றம் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.கணவர் வசந்த கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனமுடைந்த மனைவி திவ்யா விஷமருந்தி தற்கொலை. விஷம் கொடுக்கப்பட்ட 9 வயது மகன் லட்சுமி பிரசாத்துக்கு எழும்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.