/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kilambakkam-mtc-buy-stand-art_0.jpg)
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதோடு செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணை இன்று (22.11.2024)) முதல் அமலுக்கு வருகிறது. மேலும் 28 மின்சார ரயில்களின் சேவைகளும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பின் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கம்போல் பிராட்வே இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை பிராட்வே முதல் தாம்பரத்திற்கு இயக்கப்பட உள்ளது. அதே போன்று தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை தாம்பரம் முதல் செங்கல்பட்டுக்கும் என மொத்தம் கூடுதலாக 20 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)