எம்.பி.மற்றும் எம்.எல்.ஏ.வுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.

Advertisment

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து பல்வேறு நிகழ்வுகளில் அவதூறாக பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு 6 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.

Advertisment

அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 29- ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.