பைக்கில் திருடனை விரட்டிப்பிடித்த எஸ்.ஐ.

chennai mobile phones si fight thief finally thief arrest

சென்னையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்துவிட்டு பைக்கில் தப்பிய திருடனை சினிமா பாணியில் பைக்கில் சென்று மடக்கிப் பிடித்தார் மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஆன்டிலின் ரமேஷ். பிடிபட்ட செல்போன் திருடன் மூலம் தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளிகள் மூன்று பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

செல்போன் திருடனை எஸ்.ஐ. மடக்கிப் பிடிக்கும் சி.சி.டி.வி. காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ளசென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உண்மையான கதாநாயகன் எஸ்.ஐ. ஆன்டிலின் ரமேஷ் என பாராட்டியுள்ளார். அதேபோல், பொதுமக்கள் உள்பட பல தரப்பினரும் எஸ்.ஐ. ஆன்டிலின் ரமேஷுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றன.

இந்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போதுசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

CCTV footage Chennai Police mobiles thief
இதையும் படியுங்கள்
Subscribe