சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

Advertisment

 Chennai Metro train Canceled

இதற்கிடையில் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, "கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. கரோனாவுக்கு தடுப்பு மருந்தோ, முன்கூட்டியே அறியும் வசதியோ இதுவரை இல்லை. மக்கள் தனிமைப் படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்த அளவுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிக மிக அவசியம். மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவை தடுக்க மோடி ஞாயிறன்று சுயஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.