சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியை தொடங்கியுள்ளது.

Advertisment

chennai metro railway start electric vehicle charge center in nandhanam

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியை தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்த வசதி அண்ணா நகர் கிழக்கு, கோயம்பேடு, உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisment

chennai metro railway start electric vehicle charge center in nandhanam

இதன் மூலம் பயணிகள் எளிதாக தங்களின் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று “ELECTREEFI” என டைப் செய்து ஆப்பை டவுன்லோடு செய்து, பயணிகள் தங்களின் மின்சார வாகனங்களுக்கு எப்போது சார்ஜ் செய்ய போகிறீர்களோ. அந்த நாளுக்கான தேதி மற்றும் நேரத்தை, குறிப்பிட்டு பதிவு செய்து வாகனங்களுக்கு சார்ஜ் கொள்ளலாம்.