Advertisment

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம்

Advertisment

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் இன்று (02.07.2018) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி மெட்ரோ ரயில் பணியாளர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு 10 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். நேற்று அவர்ள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். அப்போது மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயவு வேண்டும் என்றும், தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 35 சதவீத இதர படிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள் அவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

படங்கள்: குமரேஷ்

protest staff rail Metro Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe