Advertisment

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன சென்னை மெட்ரோ

Chennai Metro gave good news to cricket fans

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்.5 தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

Advertisment

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கான லீக் போட்டி நாளை (08.07.2023) நடைபெறவுள்ளது. இதனையொட்டி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் போட்டியினைக் கண்டுகளித்து விட்டுத்திரும்பும் கிரிகெட் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ இரயில் சேவை வழக்கத்தை விடக்கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரவு 12 மணி வரை மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது மட்டுமின்றி ரசிகர்கள் போட்டியினைக் கண்டு களித்துவிட்டு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டைக் காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி மெட்ரோ இரயிலில் பயணம் மேற்கொள்ளலாம் எனச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Australia India cricket Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe