Advertisment

காற்றின் சுழற்சியால் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

காற்றின் சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (06.01.2020) லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

chennai meterological department rain is possible tamilnadu

மேலும் தமிழகத்தில் பனிமூட்டம் குறைந்த நிலையில் நாளை மறுநாள் (08.01.2020) முதல் பனிமூட்டம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் அதிகாலை பரவலாக மழை பெய்தது.

Advertisment

இதனிடையே நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, விழுந்தவாடி, திருக்குவளை, திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், நாகூர், வேட்டைக்காரனிப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

Puducherry Tamilnadu rain possible chennai meterological department
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe