மே 16- ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு!- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

CHENNAI METEOROLOGICAL DEPARTMENT

தென்மேற்கு பருவமழை மே- 16 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான்- நிகோபார் பகுதியில் வரும் 16- ஆம் தேதி தென்மேற்கு பருவக்காற்று வீச வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர், திருத்தணியில் 40டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. குறிப்பாகச் சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அந்தமான் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai meteorological department rain
இதையும் படியுங்கள்
Subscribe