தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

chennai meteorological department tamilnadu rains possible

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, பெரம்பலூர்,தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்டமாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென்மேற்கு, மத்திய, மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஜூலை 16- ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். காற்று மணிக்கு 50- 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai meterological department Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe