/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/me333.jpg)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கோவை, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம். கேரள, கர்நாடக கடற்கரைப் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)