chennai meteorological department saying rain is possible

Advertisment

நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாமக்கல், தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம். மதுரை, திருச்சி, தருமபுரி, சேலம், கரூர், திருப்பத்தூர், வேலூரில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும்.மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மே 31- ஆம் தேதி முதல் ஜூன் 4- ஆம் தேதி வரை அரபிக்கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அரபிக்கடலில் மே 31- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.