தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெயில் 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும். காலை 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டாம். தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தெற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடாவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.