சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 17 இடங்களில் கனமழை, மூன்று இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.

chennai meteorological department heavy rain possible

Advertisment

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ மழையும், குன்னூரில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார். மேலும் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட 11% அதிகம் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 36 செ.மீக்கு பதில் 40 செ.மீ மழை பெய்துள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அடுத்து வரும் 24மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

Advertisment

chennai meteorological department heavy rain possible

மன்னார் வளைகுடா குமரி கடல் தீவுகள் இலட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை ஒட்டியுள்ள கடற்பகுதியில் சூரை காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு அடுத்து இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.