chennai meteorological department cyclonic

Advertisment

காணொளி மூலம் செய்தியாளர்களைச்சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், "மேற்குவங்கம்- வங்கதேசம் இடையே நாளை மாலை 'அம்பன்' புயல் கரையைக் கடக்கிறது. 'அம்பன்' புயல் கரையைக் கடக்க உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். 'அம்பன்' புயல் மேற்கு வங்கக் கடற்கரையில் இருந்து 630 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்". இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.