chennai merina beach women police incident

Advertisment

சென்னையில் பலியான பெண் காவலருக்குஅவரது சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் அருகிலுள்ள மேல அரியப்பபுரம் கிராமத்தின் விவசாயி சரவணன், பத்மா தம்பதியரின் மூத்தமகள் பவித்ரா. சென்னை ஆயுதப் படையில் போலீசாகப் பணிபுரிந்து வந்தவர். கடந்த சில நாட்களாக பவித்ரா சாந்தோமில் விடைத்தாள்கள் கட்டுக் காப்பு மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தவர், கடந்த 5- ஆம் தேதி புதுப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையொப்பமிட்டுவிட்டு தனது மொபட்டில் பாதுகாப்புப் பணிக்காகப் புறப்பட்டுச் சென்றார்.

chennai merina beach women police incident

Advertisment

அது சமயம் சென்னை பீச் கண்ணகி சிலை சாலை சந்திப்பில் வரும் போது மேடவாக்கத்திலிருந்து பாமாயில் ஏற்றி வந்த லாரி பவித்ரா மொபட்டில் மோதியதால் சம்பவ இடத்திலேயே பலியானார். பீச் பகுதி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு அவரது உடல் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தையடுத்த மேல அரியப்பபுரம் கிராமத்திற்கு நேற்று (08/05/2020) காலை 06.00 மணியளவில் கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்குத்தென்காசி எஸ்.பி. சுகுணாசிங், டி.எஸ்.பி. ஜாகீர் உசேன், உறவினர்கள் கிராமத்தவர்கள் ஏராளமான போலீசார் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாக சமூக விலகலைக் கடைப்பிடித்தனர்.