ADVERTISEMENT

போலி –இ- பாஸ் மூலம் கடத்தப்படும் சென்னை ஆட்கள்... பெண் உட்பட டிராவல்ஸ் உரிமையாளருக்கும் போலீஸ் வலை!

07:58 PM May 05, 2020 | kalaimohan



சென்னை கோயம்பேடு, கரோனா தொற்று பரவல் சந்தைக்கான ஹாட்ஸ்பாட்டாக மாறியதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைவிட மறுநாள் இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை வாசிகளிடையே பீதியும் அச்சமும் பரவிய நிலையில், அங்கு செட்டிலான வெளி மாவட்ட குறிப்பாகத் தென்மாவட்டவாசிகள் கிடைத்த வழியில் உயிரை கையில் பிடித்தவாறு, விட்டால் போதும் என்று வெளியேறி வருகிறார்கள்.

ADVERTISEMENT


இதில் போலீசாரின் கண்களை மறைக்க போலி –இ –பாஸ் மூலமாகவும் தென் மாவட்ட ஆட்கள் நல்ல பயணக் கொள்ளை ரேட்டில் கடத்தப்படுவதும் வெளியேறியிருக்கிறது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் ஜாபர்சாதிக். இவர் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்வதற்காக உரிய காரணங்களுக்காக மாவட்ட கலெக்டரால் தரப்படுகிற இ –பாஸ் போன்று போலீயாகத் தயார் செய்யப்பட்ட இ-பாஸ் மூலம் கடந்த மே 2ம் தேதியன்று, சென்னையிலிருந்து 5 பேரை நபர் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டண அடிப்படையில் வீரவநல்லூருக்கு அழைத்து வந்தாக போலீசாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

அதனடிப்படையில் அவரது சொகுசு காரை சோதனையிட்டதில் அது போலி இ-பாஸ் என தெரிய வந்திருக்கிறது. இது குறித்து எஸ்.ஐ. கார்த்திகேயனின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சாம்சன் கார் ஒட்டுனர்களான விரவநல்லூரின் பூமிநாதன், ரகுராமன் இரண்டு பேரை கைது செய்தவர், அவர்களிடமிருந்து சொகுசு காரையும் பறிமுதல் செய்திருக்கிறார்.

இதனிடையே தப்பிய டிராவல்ஸ் உரிமையாளர் ஜாபர் சாதிக்கும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட அவரது சகோதரியையும் போலீசார் தேடி வருகின்றர். அதே சமயம் சென்னையிலிருந்து காரில் வந்த 5பேரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

ADVERTISEMENT


இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் சோதனை சாவடியில் பணியிலிருந்திருக்கிறார் தனித் தாசில்தார் செந்தில் வேல்முருகன். அது சமயம் வந்த டவேரா TN-65-AB-1353, மற்றும் இன்னோவா TN-67-L-9799 பதிவு எண்களை கொண்ட இரண்டு கார்களில் வந்த நபர்களை விசாரித்திருக்கிறார் தாசில்தார் செந்தில்வேல்முருகன். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவிக்க அந்தப் பாஸை சோதனை செய்ததில் இரண்டு கார்களில் ஒட்டப்பட்ட பாஸ்கள் ஒரே நம்பரை கொண்டிருந்த போலி பாஸ் என தெரிய வந்திருக்கிறது.


அந்தப் பாஸ் போலியானது ஆட்சியரின் கையெழுத்தும் போலியானது. அரசு வழங்கிய பாஸ் ஸ்டிக்கர் வடிவில் வழவழப்பான தாளில் இருந்தது. ஆனால் இவர்கள் வைத்திருந்தது சாதாரண போட்டோ பிரிண்ட் அது சந்தேகத்தை ஏற்படுத்தவே உடனடியாக ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் என்கிறார் தாசில்தார் செந்தில்வேல்முருகன்.

போலி-இ-பாஸ்களின் தயாரிப்புகள் உயரத் தொடங்கி அதன்மூலம் சொந்த இடம் திரும்புவர்களை கொண்ட வியாபாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT