Advertisment

சென்னையில் சாலையில் சென்ற பைக் தீப்பிடித்து எரிந்தது; ஒருவர் பலி

சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலியானார்.

Advertisment

b

சென்னை மதுரவாயலில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவர் சாமர்த்தியமாக குதித்து தப்பினார். ஆனால், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றவர் தப்பிக்க முயன்றபோது, தீ அவரின் மேல் பரவியதால் அவரால் தப்பிக்க முடியாமல் போய்விட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியானார். உடன் வந்தவர் இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

bike tambaram mduravayal Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe