Advertisment

சென்னை மேயர் ஆர்.பிரியா! (படங்கள்) 

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

Advertisment

சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த ஆர்.பிரியா (28) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சென்னை ரிப்பன் மாளிகைக்கு பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் வந்த நிலையில் அதிமுகவைச்சேர்ந்த உறுப்பினர்கள் 15 பேரில் மறைமுக தேர்தலில் கலந்துகொள்ள யாரும் வரவில்லை. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ஆர்.பிரியா போட்டியின்றி தேர்வானார். அவருக்கு சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்து மேயருக்கான அங்கியையும் வழங்கினார். சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயராக ஆர்.பிரியா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் மிகவும் இளம்வயதில் சென்னையின் மேயரானவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் ஆர்.பிரியா என்பது குறிப்பிடத்தகுந்தது.

Advertisment

R priya mayor Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe