தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இன்று மட்டும்தமிழகத்தில் 121பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 2058 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் 4பேருக்குகரோனாஉறுதியாகி உள்ள நிலையில், தற்போது கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளி ஒருவருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனாபாதித்திருக்கும் நிலையில்கோயம்பேடு சந்தையை மூடும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மே 13ஆம் தேதி வரை கூட்டம் கூடுதல், பேரணிகள், மனிதசங்கிலி, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் 15 நாட்களுக்கு பேரணி,ஆர்ப்பாட்டம் போன்றவைகள் நடத்த அனுமதிஇல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.