/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_64.jpg)
சென்னை மணலி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரவி சங்கர். வெல்டராக பணிபுரிந்துவரும் இவருக்குராஜஸ்ரீ (வயது 15) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 10 ஆம்வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வைஎழுதி வந்துள்ளார். இன்று நடைபெற உள்ள கணித தேர்வுக்குத்தயாராகும் வகையில் நேற்று வீட்டில் தேர்வுக்கான விடுமுறையில் படித்துவந்துள்ளார். அப்போது ராஜஸ்ரீயின் பெற்றோர் வெளியில் சென்றுள்ளனர். தனியாக வீட்டிலிருந்த மாணவி, வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி ராஜஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கணக்கு பாடம் வராத பயத்தில் மாணவி பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 10 ஆம்வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மணலி பகுதியில் பெரும் சோகத்தையும்அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us