chennai madhavaram transgender incident police investigation started 

Advertisment

சென்னை மாதவரம் பகுதியில் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சனா (வயது 29). திருநங்கையானஇவர் நேற்று காலை மணலி - மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த திருநங்கை கழுதை நெரித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக போலீசார் திருநங்கையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் திருநங்கையின்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில்இருந்த சிசிடிவி கேமிராக்களை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். திருநங்கை ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.