Advertisment

அக்டோபர் 5- ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை!

Advertisment

chennai local trains resuming on oct 5th southern railway announced

அத்தியாவசிய பணி ஊழியர்களுக்கு மட்டும் அக்டோபர் 5- ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அத்தியாவசியப் பணியாளர்களுக்காக வரும் அக்டோபர் 5- ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்குகிறது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் அனுமதிக்கப்படுவர். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே ரயில் டிக்கெட் வழங்கப்படும். பயண அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர பொதுமக்களுக்கு ரயில் டிக்கெட் வழங்கப்படாது" என குறிப்பிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் சென்னையில் புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ANNOUNCED Chennai local trains service Southern Railway
இதையும் படியுங்கள்
Subscribe