கோயம்பேட்டில் குறைந்தது வெங்காய விலை!

chennai koyambedu market onion price

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்தது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூபாய் 100-க்கு மேல் விற்கப்பட்ட நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது. கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஆந்திரா வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 30 முதல் ரூபாய் 35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் கர்நாடக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 40 முதல் 45 வரையும், மகாராஷ்டிரா வெங்காயம் ரூபாய் 50 முதல் 55 வரையும், இறக்குமதி மற்றும் முதல் ரக வெங்காயம் ரூபாய் 60 வரையும் விற்பனையாகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைந்து பழைய நிலைக்கு திரும்பலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai koyambedu onion shops Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe