சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூபாய் 100 முதல் ரூபாய் 110 வரை விற்பனையாகிறது. வரத்து குறைவால் ரூபாய் 80- க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரை உயர்ந்துள்ளது.
தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்காயத்தின் விலை உயர்வால், பொதுமக்கள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயரும் பட்சத்தில் ஆம்லெட்டுகள் உள்ளிட்டவைகளின் விலை உயர வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகின்றன.