Advertisment

'கோயம்பேடு மார்க்கெட்'- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு!

chennai koyambedu  market deputy cm ops inspection for today

Advertisment

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று (27/08/2020) காலை 11.00 மணிக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்கிறார். ஆய்வுக்கு பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது பற்றி சென்னை தலைமை செயலகத்தில் வணிகர் சங்கத்தினருடன் மதியம் 12.00 மணிக்கு துணை முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அனால் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தால், மார்க்கெட்டில் பணியாற்றியஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை, தற்காலிகமாக திருமழிசை பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு நான்கு மாதங்களுக்கு மேலாக மூடியிருப்பதால் மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகள், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai DEPUTY CM PANEER SELVAM koyambedu Market
இதையும் படியுங்கள்
Subscribe