chennai koyambedu market again open for today

Advertisment

சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

கரோனா பரவலால் கடந்த மே மாதம் 5- ஆம் தேதி மூடப்பட்ட உணவு தானிய மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உணவு தானிய மார்க்கெட்டில் உள்ள 290 கடைகளும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

அடுத்த கட்டமாக கோயம்பேடு காய்கறி, கனி, மலர் மார்க்கெட்டுகள் வரும் செப்டம்பர் 28- ஆம் தேதி திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.