Advertisment

கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கரோனா!

chennai koyambedu market

Advertisment

சென்னை, கோயம்பேடு சந்தையில் ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 50 பேருக்கு கரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி சங்கத்தின் தலைவர் ராஜசேகர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது; "200 கடைகள் திறக்கப்பட்டுள்ள கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கிறார்களா என கண்காணிக்கப்படுகிறது. திருமழிசையில் இருந்து கோயம்பேட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின் காய்கறி விலை குறைந்துள்ளது" என்றார்.

குறைந்த கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நோய் பரவுகிறது. கோயம்பேடு சந்தையின் ஒருவழி மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக கோயம்பேடு வியாபாரிகள் கூறுகின்றனர்.

Chennai coronavirus koyambedu
இதையும் படியுங்கள்
Subscribe