Advertisment

சென்னையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்துகள்!!!

chennai koyambedu government bus accident

Advertisment

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர்மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பேருந்தில் பயணித்த சிலருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு திருவண்ணாமலையிலிருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து பேருந்துநிலையத்திற்குள் நுழையும்போது சாலையில் ஓரமாக நடந்துச்சென்றவர் மீது மோதிவிடக்கூடாது என்று பேருந்து ஓட்டுநர் ஸ்டேரிங்கை வலைத்திருக்கிறார். அதில் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலை நடுவிலிருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு சென்றுள்ளது. அதேநேரம் வேலூர் செல்லும் அரசு பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்துள்ளது. அப்போது கட்டுபாடு இழந்த இந்த அரசு பேருந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்துக்குள் அமர்ந்திருந்த பெண் ஒருவருக்கும் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பேருந்துக்குள் இருந்த சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது.

koyambedu Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe