Advertisment

சாலை பள்ளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு! சென்னையில் தொடரும் அவலம்...

chennai kodampakkam road drainage rains water incident

கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

Advertisment

கார் ஓட்டுநரான நரசிம்மன் சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே ஓட்டல் ஒன்றின் அருகே நடந்து செல்லும்போது மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டலின் கழிவுநீர் தேங்கும் பாதாளச்சாக்கடையின்அருகிலிருந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

k8

சில நாட்களுக்கு முன்பு சென்னை முகப்பேரில் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்தது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

k8

மழைநீர் தேங்கி சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் உள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai KODAMPAKKAM underground drainage
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe