சென்னை கே.கே.நகரில் இன்று நடந்த கொடூரக்கொலை அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சந்தியா(20) அருள்குமார்(24) என்பவரைக் காதலித்தார். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kaadhal thambathi1.jpg)
திருமணத்துக்குப்பிறகு, மாமனார் சங்கர் வீட்டிலேயே புதுமணத் தம்பதியினர் வசித்தனர். இந்நிலையில், இன்று காலை அவர்களுக்குள் நடந்த சண்டையில், கத்தியால் குத்திவிட்டார் அருள்குமார். சம்பவ இடத்திலேயே சந்தியாவின் உயிர் பிரிந்தது. மகள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கு முற்பட்ட, மாமியார் சரிதாவும் கத்தியால் குத்தப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிப்பட்டுள்ளார். கொலையாளி அருள்குமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arulkumar1.jpg)
ஆசை அறுபது நாள்; மோகம் 30 நாள் எனச் சொல்வதுபோல், 90 நாட்களிலேயே காதல் கசந்து, இத்தம்பதியின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
Follow Us