Published on 16/01/2022 | Edited on 16/01/2022

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. நேற்று வண்டலூர் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பூங்காவை ஜனவரி 31ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா (ஜன.17) நாளை முதல் மூடப்படுவதாக தெரிவித்துள்ள வன உயிரின காப்பாளர், நிலைமையை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப பூங்காவை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.