chennai kilpauk medical college hospital actress chithra

Advertisment

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (28). திருவான்மியூரைச் சேர்ந்த இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது நடிகை சித்ரா தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலை குறித்து தகவலறிந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரின் தொலைபேசியை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

c

Advertisment

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் ஹேம்நாத்திற்கும் சித்ராவுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே திருமணம் முடிந்ததாகத் தெரியவந்ததால், சட்டப்படி திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

ஹேம்நாத்திடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், சக நடிகர், நடிகைகளிடம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் கூறுகின்றன.

c4

Advertisment

இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல்பிரேத பரிசோதனை இன்று காலை தொடங்கிய நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடித்துசித்ராவின் உடல் அவரின் சகோதரர் சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்பு மருத்துவமனை அளிக்கும் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.