காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

Advertisment

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், நங்கநல்லூர், அரும்பாக்கம், கோயம்பேட்டில் மழை. அதேபோல் சூளைமேடு, எம்.எம்.டி.ஏ, உள்ளிட்ட சென்னையின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

Advertisment

chennai, kancheepuram, tiruvannamalai districts heavy rain

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரிக்கை, செவிலிமேடு, பூக்கடை சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் கனமழை. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, பிருதூர், பாதிரி, மருதாடு, செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.